உடலுறவு என்பது ஒவ்வொரு மனிதரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப அனுபவிக்கக்கூடிய ஒன்றாகும். சிலர் அதனை விரும்புகிறார்கள், சிலர் அதனை விரும்புவதில்லை. உடலுறவில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனை வரக்கூடும் என்று, நம்மில் பலருக்கு சந்தேகம் உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பாப்போம்.
பொதுவாக உடலுறவில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்கு எந்த உடல்நல பாதிப்பும் வருவதில்லை. அதனால் இது குறித்து கவலைப்படவோ அல்லது பயப்படவோ தேவையில்லை. சிலர் உடலுறவில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள், சிலர் அதை இயல்பாக அணுகுவார்கள்.
உடலுறவைக் கைவிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் வரும்: உடலுறவிலிருந்து விலகுவது உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் தனிப்பட்ட முடிவாக இருக்கக்கூடும். உங்களுடைய வாழ்வியல் முறை, வயது, ஹார்மோன் சமநிலை போன்றவைகளால் மாறக்கூடும். இது உடனடி அல்லது தீவிரமான மருத்துவப் பாதிப்புகளை ஏற்படுத்தாது.
ஹார்மோன்கள் மற்றும் யோனி ஆரோக்கியம்: பாலியல் செயல்பாடுகள், குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்களின் சுரப்பை தூண்டக்கூடியவை. ஈஸ்ட்ரோஜன் குறைதல், குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களிடம், யோனி வறட்சி, சுவர் மெலிதல் மற்றும் உடலுறவின் போது அசௌகரியம் போன்றவற்றை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு. ஆனால், இது அனைத்து மகளிருக்கும் கட்டாயமாக நிகழும் என்று அர்த்தமல்ல. தூண்டுதலின்றி நீண்டகாலம் இருப்பது இந்த மாற்றங்களை ஏற்படுத்தும் ஆபத்தைக் கொடுக்கும் என்பதே மருத்துவக் கூற்றாக உள்ளது.
இடுப்புத் தசைகள் மற்றும் இரத்த ஓட்டம்: பாலியல் செயல்பாடுகள் உங்கள் இடுப்புத் தசைகளை வலுப்படுத்தும் மற்றும் பீல்விஸிற்குள் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். இந்த தசைகள் சிறுநீர்ப்பை, கருப்பையை, குடலை ஆதரிக்கின்றன. நீண்ட காலம் உடலுறவு இல்லாமல் இருந்தால், இடுப்பு தசை வலிமை மற்றும் இரத்த ஓட்டத்தில் குறை ஏற்படும். இதனை சரியான உடற்பயிற்சிகள் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைகள் மூலம் சரி செய்யலாம். உதாரணமாக, கீகல் பயிற்சி (Kegel exercises) மிகுந்த பயனளிக்கக்கூடும்.
நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மாதவிடாய் சுழற்சி: பாலியல் உறவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஊக்குவிக்கலாம் என்றும், மாதவிடாய் சுழற்சி சீரான நிலை பெற உதவலாம் என்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், உடலுறவை தவிர்ப்பது மாதவிடாய் சுழற்சியை நேரடியாக பாதிப்பதில்லை. இதற்குப் பதிலாக, மன அழுத்தம், எடை உயர்வு அல்லது குறைவு, ஹார்மோன் நிலைமைகள் போன்றவை மாதவிடாய் சுழற்சியை பதிப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
உணர்ச்சி மற்றும் மனநிலை பாதிப்பு: உடலுறவில் ஈடுபடாமல் இருக்கும் சிலருக்கு மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியம் பாதிப்படையும். குறிப்பாக தனிமை, குறைந்த சுயமரியாதை, உறவுகளில் நெருக்கம் குறைதல் போன்ற உணர்வுகள் எழலாம். ஆனால், இது அனைவருக்கும் பொருந்தாது. சிலருக்கு இது சுதந்திரம், அமைதி மற்றும் தம்மை அதிகமாக உணரும் அனுபவமாக இருக்கலாம். நீங்கள் எடுக்கும் முடிவு உங்கள் தனிப்பட்ட ஆறுதல் மற்றும் உணர்ச்சித் தேவைகளுடன் ஒத்துப்போகிறதா என்பதுதான் முக்கியமான ஒன்றாகும்.
உடலுறவில் ஈடுபடாமல் இருப்பதால், உடலுக்கு பயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று யாரும் முடிவுக்கு வரக்கூடாது. இது உங்கள் வாழ்க்கை முறையையும், உடல் நிலையையும் பொறுத்தது. உங்கள் விருப்பம், உங்களுக்கே உரியது. உங்கள் ஆரோக்கியம், உணர்ச்சி நலன் மற்றும் மன அமைதி பாதுகாக்கப்படுவது முக்கியம்.