பரபரப்பு..! அமைச்சர் ஐ. பெரியசாமி சொத்துக் குவிப்பு வழக்கு… இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை…!

I periyaswami 2024

சொத்துக் குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்குத் தடை கோரி அமைச்சர் ஐ. பெரியசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை செய்ய உள்ளது.


தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் 2006-2010 வரையிலான காலகட்டத்தில் வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அவர், அவரது மனைவி சுசீலா, மகனும் தற்போதைய பழநி தொகுதி எம்எல்ஏ-வுமான செந்தில்குமார், மற்றொரு மகன் பிரபு ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோரை விடுவித்துத் திண்டுக்கல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த வழக்கில் மீண்டும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து தினந்தோறும் விசாரணை நடத்தி வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட எம்.பி. எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி அமைச்சர் பெரியசாமி சார்பில் வழக்கறிஞர் மாளவிகா ஜெயந்த் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Vignesh

Next Post

உடனே சார்ஜ்ர், பவர் பேக்அப் போன்றவையை ரெடியா வைங்க..! தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 18, 2025) மின்தடை ஏற்படும் பகுதிகள்..! முழு விவரம்…!

Mon Aug 18 , 2025
தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி, இன்று (ஆகஸ்ட் 18, 2025) சில இடங்களில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. இந்த மின் தடை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) அறிவித்துள்ளது. மேலும் இந்த மின்சார வாரிய பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்திற்குள் முடிந்துவிட்டால், அந்தந்த பகுதிகளில் முன்கூட்டியே மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை […]
power cut 1

You May Like