நோட்…! எம்எட் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…!

College students 2025

எம்எட் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் படிப்பில் நடப்பு கல்வியாண்டு (2025-26) மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எம்எட் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணைய தளத்தை பயன்படுத்தி நாளை மாலை வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக உயர்கல்வித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்; அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் படிப்பில் நடப்பு கல்வியாண்டு (2025-26) மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எம்எட் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணைய தளத்தை பயன்படுத்தி ஆக. 20-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட பிறகு மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 25-ம் தேதி அன்று வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 26 முதல் 29-ம் தேதி வரை நடைபெறும். முதலாமாண்டு வகுப்பு செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பின்தொடர்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கு மாரடைப்பு அபாயத்தை 41% அதிகரிக்கிறது!. ஹார்வர்டு ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Tue Aug 19 , 2025
பின்தொடர்ந்து துன்புறுத்தப்பட்ட அல்லது தடை உத்தரவுகளைப் பெற்ற பெண்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 41% அதிகரிக்கிறது என்று ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. “சர்குலேஷன்” இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, பின்தொடர்வது பெண்களின் ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கக்கூடும், மேலும் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். பின் தொடர்தல் என்பது மனிதர்களுக்கு இடையிலான வன்முறையின் (interpersonal violence) மிகவும் […]
heart attack 1 11zon

You May Like