தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…!

rain 1

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு குஜராத் வடக்கு கேரளா பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடகிழக்கு-தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும்,குறைந்தபட்ச வெப்பநிவை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மத்தியமேற்கு, அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள், வடமேற்கு, மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திரா ஒரிசா கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வடக்கு கொங்கன் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய மேற்கு, அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், தெற்கு கொங்கன்-கோவா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உலக அரங்கில் எதிரொலிக்கும் பாலஸ்தீன குரல்!. வரலாற்றில் முதன்முறையாக மிஸ் யூனிவர்ஸில் பங்கேற்கும் முதல் மிஸ் பாலஸ்தீனம்!. நதீன் அயூப் யார்?

Wed Aug 20 , 2025
நதீன் அயூப்பின் மிஸ் யூனிவர்ஸ் 2025 அறிமுகம், பாலஸ்தீனத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது பங்கேற்பாகும். தன்னம்பிக்கை, அழகு, உறுதியுடன் அவர் தனது நாட்டின் பெருமையை உலக அரங்கில் கொண்டு செல்கிறார். வரலாற்றில் முதல் முறையாக, பாலஸ்தீன் மிஸ் யூனிவர்ஸ் அழகிப்போட்டியில் பங்கேற்கிறது. இந்த வளர்ச்சி, நீண்ட காலமாக வெறும் அழகுப் போட்டியாக மட்டுமே பார்க்கப்பட்டு வரும் சர்வதேச போட்டிக்கு ஒரு மைல்கல்லை குறிக்கிறது. வரும் உலகளாவிய அழகிப்போட்டியில் 27 வயதான […]
Miss Palestine 11zon

You May Like