அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி.. ஸ்டாலின் ஷாக்..!

Pudhiya neethi katchi

2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சி தலைவர்களின் சுற்றுப்பயணங்கள், வீடு தோறும் திண்ணை பிரச்சாரங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகள், பொது கூட்டங்கள் என்று இப்போதே தொடங்கிவிட்டன. கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கு என்று வியூகம் வகுத்து களத்தில் இறங்கிவிட்டனர்.


திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் ஏற்கனவே பல கட்சிகள் உள்ள நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.

தேர்தல் நெருங்கும் இந்த சூழலில் பாமக, தேமுதிக, ஓபிஎஸ் உள்ளிட்டோர் எடுக்கப் போகும் முடிவுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இப்படியான சூழலில் அதிமுக கூட்டணியில் அதிகாரப்பூவமாக புதிய நீதிக்கட்சி இணைந்துள்ளது. வேலூரில் பரப்புரை செய்த எடப்பாடி பழனிச்சாமிக்கு வெள்ளியில் வேல் ஒன்றை வழங்கி அக்கட்சியின் தலைவர் AC சண்முகம் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, முக்கூர் சுப்பிரமணியன், புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம், வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, அதிமுக அமைப்புச் செயலாளர் ராமு உள்ளிட்டோர் உடனிருந்தனர். வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறிப்பிட்ட வாங்கு வங்கியை கொண்டுள்ள AC சண்முகம், 2026 தேர்தலில் தீவிரமாக பரப்புரை செய்யவும் திட்டமிட்டுள்ளார். இது அதிமுக கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

Read more: அதிரடி..! சொத்துக்கள் பாகப்பிரிவினை வழக்கு.. ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்..!

English Summary

New party joins AIADMK alliance.. Stalin shocked..!

Next Post

Result: 12-ம் வகுப்பு துணைத் தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு...!

Wed Aug 20 , 2025
12-ம் வகுப்பு துணைத் தேர்வுகள் , ஜூன் & ஜூலை 2025 மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தேர்வுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; நடைபெற்று முடிந்த ஜூன் / ஜூலை 2025 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வுகள் எழுதி , மறுகூட்டல் ( Re – total ) மற்றும் மறுமதிப்பீடு ( Revaluation கோரி விண்ணப்பித்தவர்களுள் , மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது […]
Tn School students 2025

You May Like