Rain Alert: இன்று முதல் ஆகஸ்ட் 27-ம் தேதி வரை… வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை…!

rain 1

தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், ஆகஸ்ட் 22, 23 தேதிகளில் ஒரு சில இடங்களிலும், ஆகஸ்ட் 24-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்


ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

தெற்கு கொங்கன்-கோவா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உங்களுக்கு கடன் தொல்லையே இருக்கக் கூடாதா..? அப்படினா பிரதோஷம் அன்று இதை பண்ணுங்க..!!

Thu Aug 21 , 2025
பிரதோஷம் என்றால் உடனே நம்முடைய நினைவுக்கு வருவது சிவபெருமானின் அருள் பெரும் நேரம் தான். ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கும், பௌர்ணமிக்கும் முன் வரும் திரயோதசி திதியில் பிரதோஷ விரதம் கடைபிடிக்கப்படுகிறது. மாலை 4.30 முதல் 6 மணி வரை நடைபெறும் பிரதோஷ காலத்தில், சிவ ஆலயங்களில் நந்தி முன் அமர்ந்து சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வழக்கமாக புதன்கிழமைகள் பெருமாளுக்குரிய நாளாகக் கருதப்படும். இந்த நாளில் பிரதோஷம் வரும்போது, நரசிம்மருக்கு […]
Sivan 2025

You May Like