திண்டுக்கலை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வானது உள்ளிட்டவற்றை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த தேர்வு முறை தவறானது என்றும், கட்சி விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்..
இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.. கட்சி விதிப்படி அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.. மேலும் விதிகளின் படி பொதுச்செயலாளர் தேர்வான என தெரிவிக்கவில்லை என்று கூறிய நீதிபதிகள் எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.. மேலும் பொதுக்குழு தீர்மானம் மூலம், பழனிசாமியை தேர்வு செய்ததற்கு எதிரான வழக்கு செல்லும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்..
இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.. இந்த வழக்கு கடந்த 19-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது… மேலும் இந்த வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் சூரியமூர்த்தி தரப்பு தாக்கல் செய்த கேவியட் மனு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.. இதையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு, சூரியமூர்த்தி கட்சியின் உறுப்பினர் இல்லை எனவும், அவருக்கு இந்த வழக்கை தாக்கல் செய்ய உரிமை இல்லை எனவும் வாதிட்டார். அப்போது, சூரியமூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டதை மறைத்து தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது, நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்று வாதிட்டார்..
இதை தொடர்ந்து, வழக்கை நிராகரித்த மறுத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை நீதிபதி திரும்ப பெற்றார்.. வழக்கின் விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்..
Read More : Flash : தவெக மாநாட்டில் 3 பேர் மயக்கம்! இன்னும் தொடங்கவே இல்ல.. அதுக்குள்ள இப்படியா? தொண்டர்கள் அவதி..!