அலர்ட்…! தமிழகத்தில் 27-ம் தேதி வரை மழை… 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று…!

cyclone rain 2025

தமிழகத்தில் 27-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று முதல் 27-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங் களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இடையிடையே 60 கி.மீ. அளவில் காற்றின் வேகம் இருக்கும். தெற்கு கொங்கன்-கோவா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

'ஆளுநர் பல ஆண்டுகளாக மசோதாக்களைத் தடுத்தால் நீதிமன்றங்கள் அமைதியாக இருக்க வேண்டுமா'?. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!.

Fri Aug 22 , 2025
ஆளுநர் பல ஆண்டுகளாக மசோதாக்களை நிறைவேற்றாமல் தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், சட்டமன்றம் “செயல்படாமல்” போனால் நீதிமன்றங்கள் தலையிட அதிகாரம் இல்லையா என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் நீதிமன்றங்கள் தலையிடுவதையும், பிணைப்பு வழிமுறைகளை வழங்குவதையும் தவிர்க்க வேண்டும் என்றும், அத்தகைய முட்டுக்கட்டையைச் சமாளிக்க ஒரு அரசியல் தீர்வைக் காணலாம் என்றும் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியபோது, ​​தலைமை […]
supreme court 1

You May Like