அடுத்த 3 மணி நேரத்திற்கு.. சென்னையில் கனமழை வெளுக்கும்.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

rain 1

சென்னையில் அடுத்த 3 மணி நேரம் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகிற 25-ந் தேதி ஒடிசா, மேற்கு வங்காள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இதன் காரணமாக இன்று (சனிக்கிழமை) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நள்ளிரவு முதல் சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக அடுத்த 3 மணி நேரம் மழை தொடரும் என்பதால் மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருபத்தூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: இன்று தேசிய விண்வெளி தினம்!. நிலவில் தரையிறங்கிய 4வது நாடு!. சரித்திரம் படைத்த இந்தியாவின் வரலாறு இதோ!.

English Summary

The Meteorological Department has said that rain will continue in Chennai for the next 3 hours.

Next Post

இந்த நாட்டில்தான் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை உள்ளது!. 1000 ஆண்டுகள் பழமையான வரலாறு இதோ!

Sat Aug 23 , 2025
உலகில் உயரமான விநாயகர் சிலை எங்கு உள்ளது தெரியுமா? இந்தியாவில் இல்லை! விநாயகருக்கென எண்ணற்ற கோவில்களும் சிலைகளும் உள்ள தாயகம் இந்தியாவே என்றாலும், அந்த மிக உயரமான விநாயகர் சிலை இந்தியாவில் இல்லை. 39 மீட்டர் உயரமுள்ள விநாயகர் சிலை தாய்லாந்தின் சச்சோஎங்சாவ் மாகாணத்தில் அமைந்துள்ளது. இது இன்று ஒரு முக்கிய யாத்திரைத் தலம் மற்றும் சுற்றுலா தலமாக வளர்ந்துள்ளது. விநாயகர் தடைகளை நீக்குபவராகவும், ஞானத்தின் கடவுளாகவும் வழிபடப்படுகிறார். தென்கிழக்காசியாவில் […]
tallest statue of Lord Ganesha 11zon

You May Like