தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூன்று நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூன்று நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி வரும் 10.09.2025 முதல் 12.09.2025 வரை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி நடைபெற உள்ளது. இப்போது அழகு தொழிலில் அசைக்க முடியாத இடத்தை பிடிக்க. சரியான பயிற்சி தேவை! பிரைடல், ஃபேஷன், சினிமா, HD மேக்கப், ஹேர்ஸ்டைல், ஸ்கின் கேர், SFX வரை அனைத்தும் ஒரே இடத்தில் கற்கும் முழுமையான பயிற்சி வழங்கப்படும்.
மேம்பட்ட அழகுக்கலை நுணுக்கங்கள், கிளாஸ் ஸ்கின் மேக்கப் திருமணம் மற்றும் வரவேற்பு, மணப்பெண் அலங்காரம், ஹெச்.டி, 3 டி, 4டி மேக்கப் நுட்பங்கள், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மேக்கப் கலைகள், இயற்கை தோற்றம் தரும் மேக்கப், தோல் உணர்திறன் சோதனை மற்றும் திருத்தம், அதிக நுட்பமுள்ள கண் மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைலிங் சேலை அணிவது குறித்த தொழில்நுட்ப பயிற்சி, தயாரிப்பாளர்கள் தொடர்பு மற்றும் வாடிக்கையாளர்கள் மேலாண்மை வேலைவாய்ப்பு வழிகாட்டி செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படும்.
மேக்கப் ஆர்வலர்கள் மற்றும் அழகுத்துறையில் பணியாற்ற விரும்பும் பெண்கள் மட்டுமே இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள முடியும். இப்பயிற்சியில் சேர ஆர்வமுள்ளவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவராக, குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10ம் வகுப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும்விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம் இந்தப் பயிற்சிகள் தொடர்பான கூடுதல் விபரங்களை பெற விரும்புவோர் www.ediitn.in என்ற வலைதளத்தில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு அலுவலக வேலைநாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை 9543773337 மற்றும் 9360221280 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.