தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அது தொடர்பான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சி தலைவர்களின் சுற்றுப்பயணங்கள், வீடு தோறும் திண்ணை பிரச்சாரங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகள், பொது கூட்டங்கள் என்று இப்போதே தொடங்கிவிட்டன. கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கு என்று வியூகம் வகுத்து களத்தில் இறங்கிவிட்டனர்.
திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் ஏற்கனவே பல கட்சிகள் உள்ள நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியைத் தக்க வைக்க கூட்டணி மிக மிக அவசியம் என்பதால் கூட்டணியை விடாமல் மேலும் வலுவாக்குவதற்கான நடவடிக்கையில் திமுக இறங்கியுள்ளது.
அதேசமயம் பாமக, தேமுதிக, ஓபிஎஸ் உள்ளிட்டோர் எடுக்கப் போகும் முடிவுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் பாமக தலைவர் ராமதாஸ் தலைமையிலான கட்சி இணைய வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பின்னணியில், பாமக நிறுவனர் ராமதாஸும், திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவும் இடையே ரகசிய சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஒரு முக்கிய அமைச்சர் நேரடியாக இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சீட் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் வரை பாமக அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தவிர்க்கிறது. இதனால், திமுக கூட்டணிக்குள் கணக்கீடுகள் புதிதாக மாறும் நிலை உருவாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
Read more: அஜித், சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கும் விஜய்.. என்ன விஷயம் தெரியுமா..?