Alert: இன்று முதல் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு… 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று…!

rain 1

தமிழகத்தில் சில இடங்களில் இன்று முதல் 28-ம் தேதி வரை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகக்கூடும். தவிர, மேற்கு திசை காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 30-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று ஓரிரு இடங்களிலும், நாளை முதல் 28-ம் தேதி வரை சில இடங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 82 முதல் 97 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.

நாளை மத்தியமேற்கு, அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். குஜராத் வடக்கு கொங்கன் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்த பரிகாரம் செய்தால் திருமண வரன் உங்களை தேடி வரும்..!! ஓலைச்சுவடியில் ஒளிந்திருக்கும் ரகசியம்..!!

Mon Aug 25 , 2025
ஜோதிட நம்பிக்கைகள் என்பது தமிழர்களின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒருவரின் பிறந்த ஜாதகத்தை வைத்து, கிரக நிலைகளை ஆராய்ந்து, அதனடிப்படையில் செய்யப்படும் பரிகாரங்கள் இன்று பலரின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகின்றன. தோஷங்களை சீர்செய்யவும், நல்ல பயன்களை அதிகரிக்கவும் பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. இவை, சீரமைக்கும் ஆன்மீக வழிகளாக பார்க்கப்படுகின்றன. இந்த பரிகார முறைகள் பெரும்பாலும் நம்பிக்கையையும், ஆன்மீகத்தின் ஆழத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக உள்ளது. புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலில் […]
Marriage 2025

You May Like