Rain Alert: இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை…? வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை…!

rain 2025 2

இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி யுள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரு தினங்களில் மேலும் வலுவடையக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை முதல் வரும் 1-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆந்திரா ஒரிசா மேற்கு வங்காள கடலோரப்பகுதிகள், வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இன்று விநாயகர் சதுர்த்தி..! வழிபட உகந்த நேரம் எது? தடைகள் நீங்கி.. செல்வம் பெருக.. இப்படி பூஜை செய்யுங்க!

Wed Aug 27 , 2025
விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் கொண்டாடப்படும் மிகப் பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும். அறிவு, செல்வம் மற்றும் மங்களகரமான தொடக்கங்களின் கடவுளான விநாயகர் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்., பிரமாண்டமான ஊர்வலங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் இந்த விழா கொண்டாப்படுகிறது. விநாயகரின் பிறப்பு விநாயகப் பெருமானின் பிறப்பு பற்றிய புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டது. புராணத்தின் […]
ganesh chaturthi 5 vastu tips to keep in mind before bringing idol home 1

You May Like