கோவில் நிதி கல்விக்கு பயன்படுத்தியது நீதியா..? அநீதியா..? – உச்சநீதிமன்றம் வழங்கிய பரபர தீர்ப்பு!

Supreme Court 2025 1

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில் நிலத்தில் கல்லூரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர். ரமேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) ஆணையர் வெளியிட்ட கட்டிட அனுமதி அறிவிப்பாணையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்தது.


இதனை எதிர்த்து டி.ஆர். ரமேஷ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, ரமேஷ் தரப்பில், “கல்லூரி கட்டப்படும் இடம் கொளத்தூர் சோமநாத் ஆலயத்தின் சொத்தாகும்; மேலும் கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்துவது சட்டவிரோதம்” என்று வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த HR&CE துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “அந்த இடத்திற்கான வாடகையாக ரூ.3.19 லட்சம் கோயிலுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இலவசமாக நிலம் பயன்படுத்தப்படவில்லை. மேலும், கபாலீஸ்வரர் கோயில் சார்பில் கல்விக்காகத்தான் கல்லூரி அமைக்கப்படுகிறது” என விளக்கம் அளித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “மாணவர்களின் எதிர்காலத்துக்காக கல்லூரி கட்டமைப்பு செய்யப்படுகிறது. அதற்காக கோயில் நிதியை பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பினர். பின்னர், கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்காக பயன்படுத்துவதில் குற்றம் இல்லை எனக் கூறி, ரமேஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Read more: “45 நாளில் தீர்வு கிடைக்கும்னு நம்புனோம்.. இப்போ ஆத்துல மிதக்குது..!!” எல்லாமே வேஸ்ட்.. புலம்பும் மக்கள்..

English Summary

What is wrong in using temple funds for education? Supreme Court

Next Post

வங்கியில் பணம் சேமிக்க விரும்புவோர் கவனத்திற்கு.. இந்த வாய்ப்பு இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டுமே!

Fri Aug 29 , 2025
இந்தியன் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி உள்ளிட்ட சில வங்கிகள், சிறப்பு நிலையான வைப்பு திட்டங்களில் (FD) தங்கள் முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்தியன் வங்கி செப்டம்பர் காலக்கெடுவுடன் 444 நாள் மற்றும் 555 நாள் FD என இரண்டு சிறப்பு FD திட்டங்களை வழங்குகிறது. ஐடிபிஐ வங்கி செப்டம்பர் காலக்கெடுவுடன் 444, 555 மற்றும் 700 நாள் சிறப்பு FDகளையும் வழங்குகிறது. இந்த FDகள் 444 […]
fd saving money

You May Like