தமிழக மீனவர்கள் 5 பேருக்கு ரூ.7,30,000 லட்சம் அபராதம்… 2 ஆண்டுகள் சிறை தண்டனை…! இலங்கை நீதிமன்றம் உத்தரவு…!

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் அபராதமும், 2 மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் சம்பவம் குறைந்துள்ளது. மேலும் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. மேலும், மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அதை நாட்டுடைமையாக்கும் வேலைகளையும் இலங்கை அரசு செய்து வருகிறது. மேலும், மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஆரோக்கிய டேனியல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் பெரிக், சீனு, சசிக்குமார், முக்கூரான், முத்து சரவணன், காளிதாஸ், செந்தில் ஆகிய 7 மீனவர்கள் 30.06.25 அன்று பாக் நீரிணை பகுதியில் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

7 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று 7 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி 7 மீனவர்களில் 5 மீனவர்களுக்கு தலா இலங்கை ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 5 மீனவர்களுக்கும் மொத்த அபராதம் இலங்கை ரூ.25 லட்சம் ஆகும். இதன் இந்திய மதிப்பு ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். எஞ்சியுள்ள 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 2-வது முறையாக சிறைபிடிக்கப்படுவதால் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Vignesh

Next Post

ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை ஏன் அறைந்தார்?. 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான வீடியோ வைரல்!. இதை பகிர்ந்தது யார் தெரியுமா?.

Sat Aug 30 , 2025
ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவரான லலித் மோடி இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறைவதைக் காணலாம். இந்த வீடியோ 2008 ஆம் ஆண்டு ஐபிஎல்லின் முதல் சீசனில் எடுக்கப்பட்டது, அப்போது மும்பை இந்தியன்ஸைச் சேர்ந்த ஹர்பஜன் சிங்கும் கிங்ஸ் லெவன் […]
Harbhajan slapping Sreesanth 11zon

You May Like