பருத்தி மீதான இறக்குமதி வரி விலக்கை 2025 டிசம்பர் 31 வரை மத்திய அரசு நீடித்துள்ளது.
இந்திய ஜவுளித் துறைக்கு பருத்தி அதிக அளவு கிடைப்பதற்காக பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு 2025 ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை தற்காலிகமாக விலக்கு அளித்திருந்தது. ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதலாக ஆதரவு அளிக்க தற்போது 2025 செப்டம்பர் 30 முதல் டிசம்பர் 31 வரை பருத்தி மீதான (எச் எஸ் 5201) இறக்குமதி வரிக்கான விதி விலக்கை மத்திய அரசு நீடித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு ஏற்கெனவே 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது. அதுதவிர, வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வரியும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், சுங்க வரி இல்லாமல் பருத்தியை இறக்குமதி செய்வதற்கான அறிவிக்கையை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டது. இந்தச் சலுகை ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரை வரை அமலில் இருக்கும்.
ஜவுளித் துறை உள்பட இந்திய ஏற்றுமதியாளர்கள் அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரியை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில், பருத்திக்கான இறக்குமதி வரியை இந்தியா நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு உதவும் என்று கருதப்படுகிறது.