டெல்லியில் அமித்ஷா இல்லத்தில் தமிழக பாஜக உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இதில் கொண்டனர்.. எனினும் இதில் அண்ணாமலை பங்கேற்கவில்லை..
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.. தேர்தல் நெருங்கி வரும் இந்த சூழலில் உட்கட்சி பூசல்களை களைய வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளாராம்.. கருத்து வேறுபாடு, உட்கட்சி பூசல்களை தவிர்ப்பது மிக மிக நல்லது என்றும் பாஜக மூத்த நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுறுத்தி உள்ளார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. அவர் தேர்தலில் போட்டியிடுவதை பாஜக விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.. தமிழக அரசியலை விட்டு, அண்ணாமலையை தூரமாக வைத்திருக்க வேண்டும் என்று அமித்ஷா கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.. டெல்லியில் நடைபெற்ற தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா இந்த தகவலை கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அவருக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது.. குறிப்பாக அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கபப்டலாம் என்று சொல்லப்பட்டது.. ஆனால் அப்படி எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை..
பாஜக – அதிமுக கூட்டணிக்கு அண்ணாமலை ஒத்துழைப்பு வழங்குவாரா என்பதில் பாஜக மேலிடத்திற்கு சந்தேகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.. அதே போல் அண்ணாமலையின் நடவடிக்கையில் திருப்தி இல்லாததாலும் அவருக்கு தேர்தலில் சீட்டோ அல்லது தேசிய அளவில் பொறுப்போ வழங்கப்படாது என்று கூறப்படுகிறது.. மேலும் தமிழ்நாடு அரசியலில் இருந்தே அண்ணாமலையை விலக்கி வைக்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..



