உஷார்..! இந்த Link-ஐ பயன்படுத்தி வேலை தேட வேண்டாம்…! மத்திய அமைச்சகம் கொடுத்த எச்சரிக்கை…!

college 5g mobile 2025

வேலைவாய்ப்புத் தொடர்பான மோசடியான இணையதளங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.


இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; மத்திய அரசின் சார்பில் பணியாளர் சேர்ப்புக்காக https://viksitbharatrozgaryojana.org/ மற்றும் https://pmviksitbharatrozgaryojana.com/ என்ற இணையதளங்களில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த இணையதளங்களுக்கும் அமைச்சகத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்றும் அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே, இது போன்ற இணையதளங்களுக்கு தனிப்பட்ட தகவல்களை பகிரவோ அல்லது பணத்தை அனுப்பவோ வேண்டாம் என்று அமைச்சகம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், பதிவு செய்வதற்காக பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதம் வேலைவாய்ப்புத் திட்ட இணையதளம் தொடங்கப்படுவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தமது 12-வது சுதந்திர தினவிழாவில் அறிவித்தார். இத்திட்டம் குறித்த உண்மையான தகவல்களையும் சேவைகளையும் அறிய வேலை வழங்குவோர் (https://pmvbry.epfindia.gov.in அல்லது https://pmvbry.labour.gov.in) என்ற இணையதளத்தை அணுகலாம் என்றும் ஒருமுறை பதிவை நிறைவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசடியான இணையதளங்கள் மற்றும் தவறான பணியாளர் சேர்ப்பு தகவல்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்கம் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளது.

Read More: யாராக இருந்தாலும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்…! இபிஎஸ் கூட்டத்தில் நடந்த ஆம்புலன்ஸ் சம்பவத்தை கண்டித்த நீதிமன்றம்…!

Vignesh

Next Post

இல்லத்தரசிகளே!. இந்த 5 ஸ்மார்ட் சமையலறை டிப்ஸை தெரிஞ்சுக்கோங்க!. எந்தப் பொருளும் வீணாகாது!

Thu Sep 4 , 2025
ஒவ்வொரு பெண்ணும் தனது சமையலறையில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் கெட்டுப்போகவோ அல்லது குப்பைத் தொட்டியில் போகவோ கூடாது என்று விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், இன்று நாங்கள் உங்களுடன் 5 புத்திசாலித்தனமான டிப்ஸ்களைப் பகிர்ந்து கொள்கிறோம், இது பொருட்களை வீணாக்குவதைத் தடுக்கும். பணத்தை மிச்சப்படுத்தும் சமையலறை ஹேக்குகள்: சமையலறை ஒவ்வொரு வீட்டிலும் மிக முக்கியமான பகுதியாகும், ஆனால் அதுதான் அதிக நேரத்தையும் முயற்சியையும் செலவிடும் இடமாகும். சில நேரங்களில் பச்சை கொத்தமல்லி இரண்டு […]
smart kitchen hacks

You May Like