திண்டுக்கலை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வானது உள்ளிட்டவற்றை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த தேர்வு முறை தவறானது என்றும், கட்சி விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்..
இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது..
இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.. இந்த வழக்கு கடந்த 19-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது… மேலும் இந்த வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. அதிமுக பொதுசெயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.. மேலும் சூரிய மூர்த்தியின் மனுவை நிராகரித்து, தள்ளுபடி செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட 3 வழக்குகளும் முடிவுக்கு வந்துள்ளன.. எனினும் சூரிய மூர்த்தி தரப்பு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..