மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 2,84,091 குடும்பத் தலைவிகள் பயன்…! மாவட்ட ஆட்சியர் தகவல்…!

womens loan central govt 11zon 1

நான்காண்டுகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 2,84,091 குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ளனர் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 07.05.2021 அன்று ஆட்சி பொறுப்பேற்றது முதல் நாளது வரை ஏழை, எளியோர், மகளிர், கல்லூரி மாணவ, மாணவிகள், தொழில் முனைவோர்கள், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர், திருநங்கைகள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் மக்களைத்தேடி மருத்துவம், விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன், இன்னுயிர் காப்போம் /நம்மைக் காக்கும் 48 திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளான 15.09.2023 அன்று காஞ்சிபுரத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் ரூ.1,000 வழங்கிடும் தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

மேலும், இத்திட்டத்தின் கீழ், தற்போது புதியதாகக் கண்டறியப்பட்டுள்ள 7.35 இலட்சம் பயனாளிகளுக்கும், சென்னை கலைவாணர் அரங்கத்தில் 10.11.2023 அன்று ஏற்கெனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டு மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 2,84,091 குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மழை , வெள்ளம் பாதித்த மாநிலங்களை நேரில் பார்வையிடுகிறார் பிரதமர் மோடி!

Sat Sep 6 , 2025
கடும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களான உத்தராகண்ட், சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு – காஷ்மீரில் கனமழை பெய்து வருகிறது. இருப்பினும், ஆங்காங்கே மேக வெடிப்பு காரணமாக திடீரென மழை கொட்டித்தீர்க்கிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொட்டித்தீர்க்கும் மழையால், முக்கிய சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்துள்ளன. […]
pm modi visit flood states 2

You May Like