பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) தனது குழாய்கள் பிரிவில் தேசிய அளவில் 537 தொழிற்பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எனென்ன பிரிவுகளில் தொழிற்பயிற்சி நிரப்பப்படுகிறது?
* மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், டெலி கம்யூனிகேஷன் மற்றும் இன்ஸ்ரூமெண்டேசனினி டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பதவி உள்ளன.
* கணக்கு (Accountant) மற்றும் உதவி எச்.ஆர் பிரிவுகளில் தொழிற்பிரிவு அப்ரண்டிஸ் இடங்கள் உள்ளன.
* 12-ம் வகுப்பு தகுதியில் டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவியில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 முதல் 24 வரை இருக்கலாம். வயது வரம்பில் மத்திய அரசு விதிமுறைகளுக்கு உட்பட்ட ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு தளர்வு பின்பற்றப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 வருடங்கள் வழங்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
* டெக்னிக்கல் அப்ரண்டிஸ் பதவிக்கு மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேஷன் உள்ளிட்டவற்றில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
* கணக்கு மற்றும் உதவி எச்.ஆர் பிரிவிற்கு வணிகம் மற்றும் ஏதேனும் ஒரு டிகிரியை முடித்திருக்க வேண்டும்.
* டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* இதில் Domestic Data Entry Operator பிரிவில் உள்ள இடங்களுக்கு அதற்கான திறன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: தொழிற்பயிற்சி பெறும் காலத்தில், மத்திய அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மொத்தம் 12 மாதங்களுக்கு பயிற்சி பெற வேண்டும்.
தேர்வு முறை:
* எழுத்துத் தேர்வு, நேர்காணல் எதுவும் இல்லை.
* விண்ணப்பிக்கும் போது குறிப்பிடப்படும் கல்வித் தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
* மதிப்பெண் பட்டியலில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் முன்னுரிமை பெறுவர்.
சான்றிதழ் சரிபார்ப்பு & மருத்துவ பரிசோதனை
- கல்வித் தகுதி சான்றிதழ்கள்
- மதிப்பெண் சான்றிதழ்கள்
- திறன் சான்றிதழ் (ITI / பிற பயிற்சி)
- வகுப்பு / பிரிவு சான்று
- பிறந்த தேதி சான்று
- ஆதார் எண்
- அடையாள அட்டை
- நிரந்தர வீட்டு முகவரி சான்று
- இவற்றின் அசல் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- அத்துடன், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தகுதி நிரூபிக்கப்பட்ட பிறகு மட்டுமே இறுதி தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://plapps.indianoilpipelines.in/ என்ற இணையதளத்தில் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு முதலில் https://www.apprenticeshipindia.gov.in/ மற்றும் https://nats.education.gov.in/student_register.php என்ற தொழிற்பயிற்சிக்கான இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கட்டணம் கிடையாது.
கடைசி தேதி: செப்டம்பர் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.



