மூச்சுவிடக்கூட Script-ஐ நம்பி வாழும் இந்த ஸ்க்ரிப்ட்நிதி.. மாட்டிக்கொள்ளும் அபாயம் இருப்பதால் அலறுகிறார்.. தவெக ஐடி விங் பதிலடி..!

vijay udhyanidhi

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்திருந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. 6-வதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. சென்னை தலைமை செயலக்கத்தில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை தலைமை செயலகத்தில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்.. எம்.ஆர். விஜயபாஸ்கரும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.


அடுத்தடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாம செய்து தவெகவில் இணைவதை எதிர்க்கக்ட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா. இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.

ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம். “தொட மாட்டேன் – தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்? SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உதயநிதியின் இந்த விமர்சனத்திற்கு தவெக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது. தனது எக்ஸ் பக்க பதிவில் “ உளறல்நிதியின் மற்றொரு நாள். மற்றுமொரு உளறல். ஆட்சியில் இருக்கும்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும், ஆட்சி பறிபோன பிறகு ம.தி.மு.க எம்.எல்.ஏ.க்களையும் விழுங்கி ஏப்பம் விட்ட ஒவ்வாமைநிதிக்கு, தானாக ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து தாங்கள் செய்த ஒட்டகபேரம் நினைவுக்கு வந்து உறுத்துகிறதுபோலும்.

புதிதாகத் தொடங்கியுள்ள Sofa, table, chair, teapoy வியாபாரத்தை மக்களிடம் பதியவைக்கவே sofamodel என்று சொல்லிச் சொல்லிப் பார்க்கிறார். தன் வியாபாரம் செல்ஃப் எடுக்காமல் சிதறிப் பதறுகிறார். Extreme-ஆக vex ஆகி விரக்தியைக் கொட்டுகிறார். தீயசக்தி தி.மு.க.வின் கட்சிக்காரர்களும் திருட்டு மாடல் ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களும் அபார சுருட்டல்களில் சிக்கி வருவதால், தாங்கள் கண்டபடி purchase செய்த funds எல்லாம் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருப்பதால் அலறுகிறார்.

மூச்சுவிடக்கூட Script-ஐ நம்பி வாழும் இந்த ஸ்க்ரிப்ட்நிதி ஆட்சியைப் பிடிக்க மறைமுகமாகத் திட்டமிட்டுத் தொட்ட கதையும் தொடமுயன்று தோற்ற கதையும் அம்பலமாகுமோ என்று பதறுகிறார். பற்பல லிங்கங்களையும் பல்வேறு செல்வங்களையும் vending machine-ல் போட்டு வெளுத்த தி.மு.க.வை, மக்கள் எதிர்வரும் இடைத்தேர்தலில் மட்டுமல்ல இனி வரும் தேர்தல்கள் அனைத்திலும் வெளுவெளுவென வெளுக்கப் போவது உறுதி.” என்று தெரிவித்துள்ளது.

Read More : தவெக ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வழக்கு! ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்..! மு.க. ஸ்டாலின் காட்டமான பதிவு..!

RUPA

Next Post

ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிட வேண்டும்? அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

Mon Jun 29 , 2026
முட்டைகள் இயற்கையின் ஒரு சிறந்த கொடையாகும். ஒரு முழு முட்டையில் சுமார் 6 கிராம் உயர்தர புரதம் உள்ளது. இதில் கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) அறவே இல்லை. எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். இதுமட்டுமின்றி, முட்டையின் மஞ்சள் கருவில் மூளை வளர்ச்சி மற்றும் தசை செயல்பாட்டிற்குத் தேவையான ‘கோலின்’ (choline), நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் B12 மற்றும் கண் பார்வையை மேம்படுத்தும் ‘லுடீன்’ […]
Egg 2026

You May Like