“பூஜா ஹெக்டேவை விட செமயா இருக்கே”..!! கல்லூரி மாணவர்களுடன் மோனிகா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பேராசிரியை..!!

Monika 2025

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் கூலி. தற்போது இப்படம் அமேசான் பிரைமிலும் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர் கான் போன்ற பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.


இந்த படத்தில் பூஜா ஹெக்டே ‘மோனிகா’ பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்தப் பாடல் வெளியானதுமே பட்டித் தொட்டி எங்கும் கவனம் பெற்றது. ஒரே இரவில் படத்தின் பிரபலத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றது இந்தப் பாடல் தான். ‘மோனிகா’ பாடலின் துள்ளலான இசை, இணையத்தில் பெரும் ட்ரெண்டாக மாறியுள்ளது.

பல திரை பிரபலங்களும், சமூக வலைதள பிரபலங்களும் இந்த பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று கூட வீடியோக்களை வெளியிட்டு, இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

இந்நிலையில், கல்லூரியில் நடந்த விழா ஒன்றில், அங்கு படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து “மோனிகா” பாடலுக்கு பேராசிரியை ஒருவர் நடனமாடியுள்ளார். அவரின் நடனத்தை பார்த்து மாணவர்களும், சக பேராசிரியைகள் உள்ளிட்டோர் ஆரவாரம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிலர் இதை கடுமையாக விமர்சித்தாலும், இன்னும் சிலர் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

Read More : அவசர காலத்தில் உயிரை காக்கும் Lock Screen Emergency..!! உங்கள் ஸ்மார்ட்போனில் அமைப்பது எப்படி..?

CHELLA

Next Post

Pillow Talk| தம்பதிகளே உஷார்!. உடலுறவுக்குப் பிறகு இந்த பழக்கம் இருக்கா?. ஆராய்ச்சியில் அதிர்ச்சி!

Fri Sep 12 , 2025
உடலுறவு என்பது உடல் இன்பத்திற்கு மட்டுமல்ல, உறவுகளில் உணர்ச்சி ரீதியான தொடர்பை ஆழப்படுத்துவதற்கான ஒரு வழியாகும். ஆனால் உடல் ரீதியான உறவுக்குப் பிறகு, தம்பதிகள் இதுபோன்ற பல விஷயங்களைச் செய்கிறார்கள், இது அவர்களின் உறவுக்கு சரியானதல்ல. நெருக்கமான தருணங்களுக்குப் பிறகு செலவிடும் நேரம் (தலையணை பேச்சு) சமமாக முக்கியமானது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். தம்பதிகள் தங்கள் இதயத்தின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், உணர்ச்சி ரீதியாக ஒருவருக்கொருவர் ஆழமாக இணைக்கவும் கூடிய […]
pillow talk

You May Like