Breaking : ஒரே நாளில் ரூ.5,000 உயர்வு..! மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி விலை..!

Gold Jewellery

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி, தங்கம் விலை இன்று ஒரு கிராம் ரூ.80 அதிகரித்து, ரூ.14,000-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. 

அதே போல் வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து, ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து, ரூ.2.70 லட்சத்திற்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : நகைக் கடன் பெறுபவர்கள், இந்த இரண்டு விஷயங்களை தெரிந்துகொள்ளாவிட்டால், பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும்..!

RUPA

Next Post

'மத்திய கிழக்கு, ஐரோப்பா துண்டு துண்டாக சிதறியிருக்கும்..': ஈரானின் அணுசக்தித் திட்டத்தை தடுப்போம் என டிரம்ப் சூளுரை..!

Sat May 2 , 2026
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க அனுமதிக்க முடியாது என்று மீண்டும் வலியுறுத்தினார்; மேலும், மத்திய கிழக்கு நாடுகளை மட்டுமல்லாமல் ஐரோப்பாவையும் காப்பாற்றுவதற்காகவே ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர் நியாயப்படுத்தினார். புளோரிடாவில் உள்ள ‘தி வில்லேஜஸ்’ (The Villages) பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இந்த கருத்துகளை தெரிவித்தார்.. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க அனுமதிக்கப்பட்டால், […]
donald trump

You May Like