மக்களே…! சேலம், வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று இடியுடன் கனமழை…!

rain 1

ஈரோடு, சேலம், வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், நாளை பெரும்பாலான இடங்களிலும், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து 21-ம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், 17-ம் தேதி மேற்கண்ட பகுதிகளுடன், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

18-ம் தேதி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், 19-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்தியாவிலிருந்து டீசல் இறக்குமதிக்கு தடை விதித்த உக்ரைன்!. அக்டோபர் 1 முதல் அமல்!. காரணம் என்ன?.

Tue Sep 16 , 2025
அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ரஷ்ய எண்ணெயை சாக்காக வைத்து இந்தியாவைப் பற்றிப் பேசுகின்றன. இதற்கிடையில், உக்ரைன் இப்போது இந்தியாவில் இருந்து வரும் டீசலை தடை செய்வது குறித்து யோசித்து வருகிறது. உக்ரைனின் எரிசக்தி ஆலோசனை நிறுவனமான என்கோர், திங்கட்கிழமை ( செப்டம்பர் 15 , 2025 ) உக்ரைன் இந்தியாவில் இருந்து டீசல் வாங்குவதை அக்டோபர் 1, 2025 முதல் தடை செய்யும் என்று அறிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி […]
Ukraine bans diesel imports india

You May Like