உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான 17ஆவது லீக் போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு கணுக்கால் பகுதியில் காயம் ஏற்படவே எஞ்சிய இன்னிங்ஸிலிருந்து வெளியேறினார். இதன் காரணமாக நியூசிலாந்திற்கு எதிராக தர்மசாலாவில் நடந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் விளையாடினார்.
இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. காயத்தில் இருந்து அவர் இன்னும் குணமாகாததால் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.