அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே கடந்த வாரம் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ‘கெடு’ விதித்திருந்தார். அவருடைய இந்த அதிரடி அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத்தொடர்ந்து அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6-ம் தேதி அறிவித்தார். மேலும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்தார். இதனிடையே செங்கோட்டையன், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒன்றிணைய உள்ளதாக ஒரு தகவல் வெளியானது.
இந்நிலையில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக செயல்பட்டால் அதிமுகவில் இருந்து உடனே நீக்குவது இபிஎஸ் வழக்கம். இதனிடையே செங்கோட்டையன் உடன் பேசி வருவதாக ஓபிஎஸ் கூறியிருந்தார். இந்நிலையில் சில பேரை கைக்கூலியாக வைத்துக் கொண்டு ஆட்டம் போடுகின்றனர். கைக்கூலிகள் யார் என்று அடையாளம் கண்டுவிட்டோம். அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்று இபிஎஸ் சூளுரைத்துள்ளார். இதனால் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Read more: நாளை பிறக்கிறது புரட்டாசி!. பெருமாளுக்கு மாவிளக்கு போடுபவரா நீங்கள்?. இந்த விஷயங்களை மறந்துடாதீங்க!.



