ராகு – கேதுவை கையில் ஏந்தியபடி காட்சி தரும் அரிய சிவ பெருமான்.. எந்த கோவிலில் இருக்கிறார் தெரியுமா..?

shiva temple

பொதுவாக சிவாலயங்களில், சிவபெருமான் லிங்க வடிவிலோ அல்லது சிலையாகலோ மட்டுமே காட்சி தருவார். ஆனால் காஞ்சிபுரத்தில் உள்ள மஹாகாளீஸ்வரர் ஆலயம் தனித்துவமான சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சிவபெருமான், தனது ஒரு கையில் ராகுவையும் மற்றொரு கையில் கேதுவையும் தாங்கியபடி அருள்பாலிக்கிறார். இதுவே தமிழகத்தில் எங்கும் காண முடியாத அரிய தரிசனம்.


ராகு–கேது சிறப்பு:

* ஜோதிட சாஸ்திரப்படி ராகு–கேது பாவகிரகங்களாக கருதப்படுகின்றன.

* திருமணத் தடைகள், புத்திரபாக்கியத் தடைகள், காலசர்ப்ப தோஷம், நாக தோஷம் ஆகியவற்றுக்கு முக்கிய காரணம் என நம்பப்படுகிறது.

* இங்கு சிவனை வழிபட்டால், இத்தகைய தடைகள் நீங்கி சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும் என பக்தர்கள் நம்பிக்கை கொள்கின்றனர்.

புராணக் கதைகளின்படி, பாற்கடலை கடைந்தபோது அமிர்தத்தை பருகியதால், மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தால் இரண்டாக வெட்டப்பட்டும் அழியாத வாழ்வைப் பெற்றவர்கள் ராகு–கேது. பின்னர் சிவபெருமானைத் துதித்து நவகிரகங்களில் இடம்பிடித்தனர். பொதுவாக இவர்களின் சன்னதியில் மனித–பாம்பு வடிவம் மட்டுமே காணப்படும். ஆனால் மனித முகத்துடன் ராகு–கேது தரிசனம் கிடைக்கும் ஒரே தலம் காஞ்சிபுரம் மஹாகாளீஸ்வரர் ஆலயமே.

ஆலய சிறப்பு: இத்தலம் காமாட்சி அம்மன் கோவிலின் பின்புறம், காமகோட்டம் மற்றும் காளி கோவிலுக்கு இடையில் அமைந்துள்ளது. இங்கு சிவனருகே பார்வதி தேவியும் காட்சி தருகிறாள். “மாகாளன்” எனும் பாம்பு இத்தலத்தில் வழிபட்டு முக்தி பெற்றதால், இறைவன் மஹாகாளீஸ்வரர் / மாகாளேஸ்வரர் எனப் பெயர்பெற்றார். திருமணத் தடைகள், புத்திரபாக்கிய தடை, சர்ப்ப தோஷங்கள் விலகும் முக்கிய பரிகாரத் தலம் இதுவாகும்.

Read more: குரு-சந்திரன் சேர்க்கையால் ஜாதகத்தில் அதிர்ஷ்ட யோகம்! இந்த ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட்!

English Summary

The rare Lord Shiva who appears holding Rahu and Ketu in his hands.. Do you know in which temple he is located..?

Next Post

பிரதமர் மோடி பிறந்தநாள்!. உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் எழுதப்பட்ட வாழ்த்து செய்தி!. வைரல் வீடியோ!.

Thu Sep 18 , 2025
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளையொட்டி, உலகம் முழுவதிலுமிருந்து தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர் . துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா, பிரதமர் மோடியின் படத்தால் ஒளிரச் செய்யப்பட்டது . புர்ஜ் கலீஃபாவில் ” பிறந்தநாள் வாழ்த்துக்கள் ” என்று எழுதி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி , […]
pm modi bday burj khalifa

You May Like