Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… இன்று 21 மாவட்டங்களில் கனமழை…! வானிலை மையம் எச்சரிக்கை…!

rain 2025 2

இன்று தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், நாளை சில இடங்களிலும், வரும் 20 முதல் 22-ம் தேதி வரை வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

100 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியது!. ஆண்களை விட பெண்களே அதிகம்!. ஜப்பானில் நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன?.

Thu Sep 18 , 2025
ஜப்பானில் 100 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. இது புதிய சாதனையாகும். ஜப்பானில் முதியோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, ஜப்பானில் 100 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சுமார் 1,00,000 பேர் தற்போது வசிக்கின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து 55வது ஆண்டாக ஒரு சாதனையாகும். குறிப்பிடத்தக்க வகையில், இந்த மக்களில் 88 சதவீதம் பேர் […]
japan old people population

You May Like