Heart Attack | தற்போதைய காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தின் மீது பலரும் கவனம் செலுத்தி வருகின்றனர். முன்பு அரிதாகக் கேட்கப்பட்ட இதய நோய்களும், இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பும் இப்போது சர்வ சாதாரணமாகி விட்டன. இதற்கு முக்கிய காரணங்கள், நமது நவீன உணவுமுறைகளும், வாழ்க்கை முறை மாற்றங்களும்தான். இந்தப் பழக்கங்கள் எவ்வாறு இதய நோய்களுக்கு வழிவகுக்கின்றன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
மாரடைப்புக்கான முக்கியக் காரணங்கள் :
ரீஃபைண்ட் சர்க்கரை: டீ, காபி முதல் குளிர்பானங்கள், இனிப்புகள், பேக்கரி பொருட்கள் வரை சேர்க்கப்படும் ரீஃபைண்ட் சர்க்கரை, ரத்த சர்க்கரை அளவை உயர்த்துவதோடு, ரத்த நாளங்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது இதய தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்புக்கு வழிவகுக்கிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்: முழு தானியங்களுக்குப் பதிலாக, பதப்படுத்தப்பட்ட மாவு உணவுகளை உட்கொள்வது, உடலில் வீக்கத்தை உண்டாக்குகிறது. இது ரத்த நாளங்களைச் சிதைத்து, கொலஸ்ட்ரால் உற்பத்தியை அதிகரித்து, மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.
மவுத்வாஷ் பயன்படுத்துதல்: மவுத்வாஷில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை, வாயில் உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் அழித்துவிடும். இந்த நல்ல பாக்டீரியாக்கள்தான் உணவில் உள்ள நைட்ரேட்டை, நைட்ரிக் ஆக்சைடாக மாற்றும். நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறையும்போது, உயர் ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள்: சமையலுக்குப் பயன்படுத்தப்படும் அதிக அளவில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள், உடலில் நீண்டகால வீக்கத்தை உண்டாக்கலாம். இதில் உள்ள ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தி, ரத்த ஓட்டத்தைச் சிதைத்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களுக்கு காரணமாகின்றன.
புகைப்பிடித்தல்: புகைப்பிடித்தல், ரத்த நாளங்களில் உள்ள ரசாயனங்களைச் சிதைக்கிறது. இது ரத்த ஓட்டத்தை பாதித்து, வீக்கங்களை உண்டாக்குகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
இதய ஆரோக்கியத்திற்கு உதவும் வழிகள் :
உணவு: கீரை, பீட்ரூட், பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிட்ரஸ் பழங்கள், மாதுளை, நட்ஸ் மற்றும் டார்க் சாக்லேட் போன்ற உணவுகளை சாப்பிடலாம்.
பயிற்சி: தினமும் உடற்பயிற்சி செய்வது, குறிப்பாக ஏரோபிக் பயிற்சிகள் செய்வது நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியை அதிகரிக்கும்.
வாழ்க்கை முறை: தினமும் நல்ல தூக்கம், காலையில் சூரிய ஒளி படுவது, மன அழுத்தத்தைக் குறைப்பது போன்ற பழக்கங்களும் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.
Read More : புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட்டால் என்ன ஆகும்..? அறிவியல் ரீதியான காரணம் தெரியுமா..?



