2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில், கடந்த வாரம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 81,000ஐ கடந்ததால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.. இடை இடையே சிறிதளவு தங்கம் விலை குறைந்தாலும், பெரியளவில் விலை குறையவில்லை..
அந்த வகையில், சென்னையில் நேற்று முன் தினம் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.82,000ஐ கடந்து விற்பனையானது. ஆனால் நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது..
இந்த நிலையில் இன்றும் சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளது.. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.10,220க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 81,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 குறைந்து ரூ.141க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,42,000க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்..
Read More : தேசிய நெடுஞ்சாலைத் திட்ட முன்மொழிவு விதிகளை கடுமையாக்கிய மத்திய அரசு…!



