ஆந்திராவில் தீபாவளி தினத்திற்கு அடுத்த நாளான நவம்பர் 13ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசும் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்தாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 13ஆம் தேதி திங்கட்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசு தற்போது முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளியின் போது தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாட்டங்களில் பங்கேற்கும் பொதுமக்களின் பயணத்தை மேலும் சுலபமாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த ஆலோசனையின் முக்கியத்துவம் என்னவென்றால், இந்தாண்டு தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை வருவதால், ஓய்வு எடுக்க விரும்புபவர்கள் உடனடியாகத் திரும்புவது சவாலாக உள்ளது. இதனால் வேலை மற்றும் தினசரி நடைமுறைகளில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என்பதால் இதை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.