உத்தரபிரதேசத்தின் நாகினா தொகுதி எம்.பி.வும், பீம் ஆர்மி நிறுவனருமான சந்திரசேகர் ஆசாத் மீது முனைவர் பட்ட டாக்டர் ரோகிணி கவ்ரி பாலியல் துன்புறுத்தல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
இந்தூரைச் சேர்ந்த ரோகிணி கவ்ரி, தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து ஒரு அரசு சாரா அமைப்பை நடத்தி வருகிறார். சந்திரசேகருடன் மூன்று வருடங்களாக தனிப்பட்ட உறவில் இருந்ததாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் தெரிவித்தார். அதேசமயம், அவர் தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டினார்.
தேசிய மகளிர் ஆணையத்தில் இதுகுறித்து புகார் அளித்திருந்தாலும், டெல்லி போலீசார் FIR பதிவு செய்ய மறுக்கிறார்கள் எனக் கூறினார். போலீசார் செல்வாக்கு மிக்க நபர்களுடன் கை கோர்த்து செயல்படுகிறார்கள்” எனக் குற்றம் சாட்டினார். இதோடு, தனது குற்றச்சாட்டுக்கு நீதி கிடைக்காவிட்டால் தற்கொலை செய்ய வேண்டிய சூழ்நிலையில் தன்னை தள்ளுவார்கள் எனவும் அவர் சமூக ஊடகங்களில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து, “நீதி கிடைக்காவிட்டால் ஐ.நா. மேடையில் உயிரை மாய்த்துக்கொள்வேன்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதேசமயம், சந்திரசேகர் ஆசாத் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: இளநிலை, முதுநிலை மருத்துவக் கல்விக்கான இடங்களை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!