அரசியலில் விஜய் ஒரு கத்துக்குட்டி.. அதிமுக கூட்டணி பற்றி பேச அவருக்கு தகுதி இல்ல.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்..

vijay kadambur raju

அரசியலில் விஜய் ஒரு கத்துக்குட்டி என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்..

தவெக தலைவர் விஜய் நாமக்கல் நகரில் கே.எஸ் திரையரங்கம் அருகே மாபெரும் தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் உரையாற்றினார்.. அப்போது, திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் கொள்கை என்ற பெயரில் கொள்ளையடித்து வருவதாகவும் விமர்சித்தார்..


அதே போல் அதிமுக – பாஜக கூட்டணியையும் விஜய் இன்று விமர்சித்தார்.. அப்போது “ மூச்சுக்கு 300 தடவை அம்மா, அம்மா என்று சொல்லிக் கொண்டு, ஜெயலலிதா மேடம் சொன்ன விஷயங்களை மறந்துவிட்டு, பொருந்தா கூட்டணியை அமைத்துக் கொண்டு, தமிழ்நாட்டின் நலனுக்காக பாஜக உடன் கூட்டணி அமைத்தோம் என்று சொல்லிக் கொள்கிறார்களே.. அவர்களை மாதிரியும் நாம் இருக்க மாட்டோம்.. இந்த பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார்கள்? நீட்டை ஒழித்துவிட்டார்களா? கல்விக்கு தேவையான நிதியை ஒதுக்கிவிட்டார்களா? இல்லை தமிழ்நாட்டிற்கு தேவையான எல்லா விஷயங்களையும் செய்துவிட்டார்களா? அப்புறம் எதற்கு இந்த சந்தரப்பவாத கூட்டணி என்று நான் கேட்கவில்லை.. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டர்கள் கேட்கின்றனர்..” என்று தெரிவித்தார்..

இந்த நிலையில் அரசியலில் விஜய் ஒரு கத்துக்குட்டி என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ அதிமுக – பாஜக கூட்டணி பற்றி பேச விஜய்க்கு தகுதி உரிமை இல்லை.. அரசியலில் அவர் புதிது என்பதால் எங்கள் கூட்டணி பற்றி தெரியாமல் பேசுகிறார்.. எங்களை பற்றி விமர்சனம் செய்ய விஜய்க்கு தகுதியே இல்லை.. அதிமுகவின் வரலாறு என்ன? 50 ஆண்டுகால பொன்விழா கண்ட இயக்கம்.. இவர் யார் அதிமுகவை பற்றி பேச.. அரசியலில் இவர் ஒரு கத்துக்குட்டி.. அவர் முதலில் அவர் வேலையை பார்க்கட்டும்.. அவர் முதலில் களத்திற்கு வரட்டும்..

விஜய் மாவட்டத்திற்கு ஒரு கூட்டம் நடத்துகிறார்.. ஆனால் எங்கள் பொதுச்செயலாளர் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. தொகுதி வாரியாக தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு வந்து ஆதரவளிக்கின்றனர்.. மற்றவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை..” என்று தெரிவித்தார்..

Read More : எதே.. மீண்டும் TVK ஆட்சியா? என்ன சரக்கா இருக்கும்? விஜய் பேச்சை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்..!

English Summary

Former AIADMK minister Kadambur Raju has criticized Vijay as a “scoundrel” in politics.

RUPA

Next Post

பெண்ணை அடித்து, எட்டி உதைத்து, கொடூரமாக தாக்கிய கும்பல்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்.. 2 பேர் கைது..!

Sat Sep 27 , 2025
பெங்களூரு நகர சந்தைப் பகுதியில் பரபரப்பான அவென்யூ சாலையில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.. ஒரு ஆதரவற்ற பெண்ணை ஒரு நபர் சாலையில் இழுத்துச் செல்வதைப் பார்த்தனர், மேலும் அப்பெண் கொடூரமாக தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர், மேலும் இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. இணையவாசிகள் மத்தியில் பெரும் கோபம் எழுந்தது, மேலும் தாக்குதலுக்கு உள்ளான ஆண்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
women viral

You May Like