fbpx

வீடு வாங்க ஒருவருக்கு ரூ.1.50 லட்சம்… 5 ஆண்டுகளுக்கு வட்டி இல்லாத கடன்…! தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு…!

மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, ஒருவருக்கு அதிகபட்சம், 1.50 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும், வட்டியில்லா கடனாக வழங்க, 1.20 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தும், வட்டி தொகையை, மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக செலுத்தவும் அரசு உத்தரவிட்டு உள்ளது

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழக அரசின் கூட்டுறவு வங்கிகளில், பல் வேறு பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகள் வாங்கும் போது, பயனாளியின் பங்கு தொகையாக, குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். இதற்காக ஆண்டுக்கு, 1,000 நபருக்கு, வட்டியில்லா வங்கி கடன் உதவி வழங்கும் செயல்படுத்த உள்ளதாக சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது.

எனவே பயனாளிகளுக்கு செலுத்த வேண்டிய பங்கு தொகைக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, ஒருவருக்கு அதிகபட்சம், 1.50 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும், வட்டியில்லா கடனாக வழங்க, 1.20 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தும், வட்டி தொகையை, மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக செலுத்தவும் அரசு உத்தரவிட்டு உள்ளது.

Vignesh

Next Post

செம பிளான்!… தீபாவளி பரிசு அறிவித்த அமித் ஷா!… இலவச ரேஷன்!… ரூ.450க்கு சிலிண்டர்!

Mon Nov 13 , 2023
ரேஷன் அட்டைதாரர்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து இலவச ரேஷன் பெறலாம். இதோடு, 450 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கும் திட்டத்தையும் பாஜக அறிவித்துள்ளது. பாஜக தேர்தல் அறிக்கையில் பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு இலவச வீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 15 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 80 கோடி பயனாளிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு இலவச உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதாக பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். மத்தியப் […]

You May Like