மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை…! யாரெல்லாம் இதற்கு விண்ணப்பிக்கலாம்…?

School Money 2025

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்டோர் (பிசி, எம்பிசி, டிஎன்சி) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம் (‘யசஸ்வி’) மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. 2025- 26ம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இதில் பயன்பெற, பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.


இந்த திட்டத்தின் கீழ் கடந்த நிதி ஆண்டில் பயனடைந்த மாணவர்கள், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) உள்ள Renewal Application என்ற இணைப்பில் சென்று OTR எண் பதிவு செய்து 2025-26-ம் ஆண்டுக்கான விண்ணப்பத்தை புதுப்பிக்கலாம். பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9, 11-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் இந்த ஆண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பினால், மேற்கண்ட தளத்தில் செல்போன் எண், ஆதார் விவரங்களை உள்ளீடு செய்து புதிய விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.

பட்டியலிடப்பட்ட பள்ளிகள் குறித்த விவரங்களை அறிய சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தை அணுகலாம். உதவித் தொகை பெற மாணவர்கள் நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை கல்வி நிறுவனங்கள் அக்.15-ம் தேதிக்குள் சரி பார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மத்திய கிழக்கில் 'சிறப்பான ஒன்று' நடக்கிறது!. இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து டிரம்ப் சூசகம்!

Mon Sep 29 , 2025
இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து மத்திய கிழக்கில் ஒரு “பெரிய முன்னேற்றம்” வரக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் இஸ்ரேல் மீது தனது மிகக் கொடிய தாக்குதலைத் தொடங்கியது, இதில் 1,219 பேர் கொல்லப்பட்டனர், பெரும்பாலும் பொதுமக்கள் அவர். அதே தாக்குதலில், 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர், அவர்களில் 47 பேர் […]
2f2ac4021f8796d8d097c5724f3e2542

You May Like