Breaking : ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மட்டும் ரூ.1040 உயர்ந்ததால் அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..

gold new

காலை ரூ.480, மாலை ரூ.560 என இன்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 உயர்ந்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் கடந்த வாரத்தின் தொடக்கத்திலும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.. இதனால் தங்கம் விலை ரூ.85,000ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது..

இந்த சூழலில் இன்று காலை சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.10,700க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று மாலையிலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து ரூ.10,700க்கு விற்பனையானது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ. 85,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. இன்று காலை ரூ.480, மாலை ரூ.560 என இன்று மட்டும் ரூ.1040 உயர்ந்துள்ளது.

அதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 உயர்ந்து, ரூ.160 க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.1,60,000 விற்பனையாகிறது.

RUPA

Next Post

கட்டிட தொழிலாளியுடன் கள்ள உறவு..!! இரவோடு இரவாக கணவனின் கதையை முடித்த மனைவி..!! உயிரை காப்பாற்ற போராடிய கள்ளக்காதலன்..!!

Mon Sep 29 , 2025
சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகலாத் சர்தார் (42) என்பவர் தனது மனைவி பிங்கி (36) உடன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இரண்டாவது மனைவியான பிங்கி, பிரகலாத் சர்தார் உடன் பணியாற்றிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பப்லு என்பவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இருவரும் அடிக்கடி ஒன்றாக சென்று பொருட்களை வாங்கி வருவதை கணவர் பிரகலாத் சர்தார் பலமுறை கண்டித்தும், இந்தப் பழக்கம் தொடர்ந்த […]
Sex 2025 5

You May Like