கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இன்று காலை திறக்கப்பட்டது.. புதிய கல்வியாண்டில் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.. கோடை விடுமுறை நிறைவடைந்து பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் நலன், பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டனர்.. மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதற்காக பள்ளிகளில் பாடப் புத்தகங்கள், சீருடைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ பள்ளிக்கல்வித்துறையில் சில திட்டங்களில் லீக்கேஜ் இருக்கிறது.. இந்த லீக்கேஜ்களை சரிசெய்ய வேண்டும்.. காலை உணவு திட்டத்தில் 10 பேர் என கணக்கு காட்டிவிட்டு, 8 பேர் மட்டுமே பயன்பெற்றால்.. அதாவது நடுவில் இருக்கும் நபர்கள் ஏதாவது மோசடி செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..
உபகரணங்கள் கொடுப்பதில் ஊழல் செய்தாலோ, டெண்டர்களில் முறைகேட்டில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. இது போன்ற லீக்கேஜ்களை தடுத்துவிட்டாலே போதும்.. நிதிப் பிரச்சனைகள் சரியாகிவிடும்.. ஒருநாள் கல்விக்கனவுகள் பலிக்கும்..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் “ தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்.. தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட்டே ஆக வேண்டு. சிபிஎஸ்இ குறித்து வரும் புகார்கள் பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.. தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடும்..” என்று தெரிவித்தார்..
Read More : “கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி..” பள்ளிக் குழந்தைகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!



