fbpx

பயங்கரம்…! 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும்…!

இன்று 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்‌.

வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களில் மழை பெய்யும்கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்காலில் 10 செ.மீ, சென்னை நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்றைய வாக்கில் நிலவக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 16-ம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17-ம் தேதி வாக்கில் நிலவக்கூடும்.

Vignesh

Next Post

குடியரசு தினத்தன்று பதக்கம் பிளஸ் ரூ.25,000 காசோலை...! யாரெல்லாம் இதற்கு தகுதி...? முழு விவரம்

Wed Nov 15 , 2023
கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பக்கத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு ‌ தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த கோட்டை அமீர் அவர்களின் பெயரால் “கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்” ஏற்படுத்தப்பட்டு தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. ரூ.25000/- […]

You May Like