நேபாளம், வங்கதேசத்தைத் தொடர்ந்து, வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவிலும் “ஜென் Z 212” என்ற பெயரில் இளம் தலைமுறையினர் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். செப்டம்பர் 27 முதல், ரபாட், காசாபிளாங்கா, மராகேஷ், அகாடிர், டான்ஜியர் உட்பட 15 நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. 1990 முதல் 2010 வரை பிறந்த Gen Z இளைஞர்கள் வழிநடத்தும் இந்த இயக்கம், டிக்டாக், டிஸ்கார்ட் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
காரணங்கள்:
வேலையின்மை: வேலை இல்லாத இளைஞர்களின் விகிதம் 35.8% என உயர்ந்துள்ளது.
சுகாதாரச் சீரழிவு: அகாடிர் மருத்துவமனையில் 8 கர்ப்பிணிகள் பிரசவத்தின் போது உயிரிழந்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. போராட்டக்காரர்கள் “விளையாட்டு அரங்குகள் இருக்கிறது, மருத்துவமனைகள் எங்கே?” என முழக்கமிட்டனர்.
அரசின் முன்னுரிமைகள்: 2030 FIFA உலகக் கோப்பை, 2025 ஆப்பிரிக்கா கோப்பை ஆகியவற்றுக்காக பில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படுகின்றன. ஆனால் சுகாதாரம், கல்வி புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு. மொராக்கோவில் 10,000 பேருக்கு 8 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர், உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் 25 எண்ணிக்கையை விட மிகக் குறைவு.
மோதல்கள் மற்றும் உயிரிழப்புகள்: லிக்ளியா, இனெஸ்கேன், ஓஜ்டா நகரங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறின. போலீஸ் கண்ணீர்ப் புகை, தடியடி பயன்படுத்த, மோதல்களில் 3 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் கைது, 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இது, மொராக்கோவில் 2011 அரபு வசந்தம் மற்றும் 2016-17 ஹிராக் ரிஃப் போராட்டங்களுக்கு பின் உருவாகிய மிகப்பெரிய இளைஞர் எழுச்சியாகக் கருதப்படுகிறது.
Read more: அரசியல் வாதிகளால் ரஜினிக்கு பிரச்சனையும் வரக்கூடாது.. ஜெயலலிதா போட்ட ஆர்டர்..! என்ன நடந்தது..?