கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் மூக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (35). அவரது மனைவி கீதா (28). கீதாவுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த திலீப் (32) என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விஜய் வீட்டில் இல்லாத நேரம் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்தக் கள்ளக்காதல் விவகாரம் விஜய்க்குத் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், கீதாவை கண்டித்தும், காதலை கைவிடும்படி அறிவுறுத்தியும் இருந்தார். ஆனால், கீதா காதலை கைவிட மறுத்ததால் இருவருக்கும் இடையே பெரும் பிரச்னை ஏற்பட்டது. இதற்கிடையே விஜய் வெளியே சென்றதை அறிந்த கீதா, தனது காதலன் திலீப்பிடம் தெரிவித்தார். இதையடுத்து, திலீப் கீதாவின் வீட்டுக்கு வந்து உல்லாசமாக இருந்தார்.
அப்போது திடீரென்று வீட்டுக்கு வந்த விஜய், மனைவியை காதலனுடன் உல்லாசமாக இருப்பதைப் பார்த்து ஆத்திரமடைந்தார். கீதாவை கடுமையாக தாக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் கீதா ரத்த வெள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த திலீப், அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால், அவரை விடாமல் துரத்திச் சென்ற விஜய், திலீப்பின் காலில் சரமாரியாக அடித்தார்.
இதில் திலீப்பின் ஒரு கால் முறிந்தது. அக்கம் பக்கத்தினர் பலத்த காயமடைந்த திலீப்பை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உன்சூர் போலீஸ், கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகு அனுப்பி வைத்தனர். விஜயை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: சந்திராதி யோகம்; விஷ்ணுவின் அருளால் 5 ராசிகளுக்கு பம்பர் லாட்டரி.!



