மாணவர்களின் தகவலை அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்…! பள்ளி கல்வித்துறை அதிரடி…!

tn school 2025

உயர்கல்வி வழிகாட்டி பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விவரங்கள் பயிற்சியாக வழங்கப்படுகிறது. அந்த முகாம்களில் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கி உயர்கல்வி சேர்க்கை உறுதி செய்யப்படுகிறது. அடுத்தகட்டமாக இத்திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்கள் சார்ந்த விவரங்களை எமிஸ் தளத்தில் அக்டோபர் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

அதன்படி மாவட்டங்களில் ஆசிரியர்கள் பதிவிடும் தகவல்களின்படி மட்டுமே இனிவரும் நாட்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் உயர்கல்வி சார்ந்து வழிகாட்டுதல்கள் மற்றும் உயர்கல்வி சேர்க்கையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, வகுப்பாசிரியர்கள் தங்கள் மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் முழுமையாக பதிவு செய்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கல்விக்கு அதிபதி..!! தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவிக்காக பிரத்யேக கோயில்..!! எந்த மாவட்டத்தில் இருக்கு தெரியுமா..?

Sat Oct 4 , 2025
தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவிக்காக அமைக்கப்பட்ட முதல் கோயில் என்ற வரலாற்று சிறப்பைப் பெற்றது கூத்தனூர் சரஸ்வதி கோயில். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும், திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகிலும் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் தான் இந்த பிரசித்தி பெற்ற ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலின் முதன்மை தெய்வமாக, வெள்ளைத் தாமரையில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தில், வெண்ணிற ஆடை அணிந்து தேவி அருள்பாலிக்கிறார். அன்னையின் வலது கீழ்க் கையில் […]
Saraswathi 2025 1

You May Like