வேறு மாவட்ட நெல் கொள்முதல் செய்ய கூடாது… மீறினால் இந்த எண்ணுக்கு உடனே புகார் அளிக்கவும்…!

DMK farmers 2025

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பிற மாவட்ட நெல்லை கொள்முதல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு காரீப் கொள்முதல்- 2025-2026 சொர்ணவாரி பருவத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் மூலம் 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் ஆக மொத்தம் 68 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல்லினை கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து கடந்த 24-ம் தேதி வரையில் 22,735 மெ.டன் நெல்லினை 2,866 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து இதுவரையில் ரூ.53.31 கோடி தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும்.

வியாபாரிகள் பிற மாவட்ட நெல்லை கொள்முதல் செய்யப்படுவது கண்டறியப்பட்டால் நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் வியாபாரிகள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் மேற்கண்ட புகார் குறித்து மண்டல அலுவலக எண்-044-27664016 மற்றும் கைபேசி எண். 89252 79611-ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தேர்வு முடிவுகளை விளம்பரங்களில் தவறாக சித்தரித்த ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம் அபராதம்....!

Sun Oct 5 , 2025
மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு 2022 முடிவுகளை விளம்பரங்களில் தவறாக சித்தரித்த ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணி தேர்வு 2022 முடிவுகள் தொடர்பாக தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக த்ரிஷ்டி ஐஏஎஸ் (விடிகே எடுவெஞ்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்) நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்தத் தேர்வில் 216+ […]
Central 2025

You May Like