வி.கே.சசிகலா வீட்டிற்குள் எகிறி குதித்த மர்ம நபர்..!! நள்ளிரவில் நடந்த திக் திக் சம்பவம்..!! போயஸ் கார்டனில் பரபரப்பு..!!

Sasikala 2025

நள்ளிரவில் வி.கே.சசிகலா வீட்டிற்குள் மர்ம நபர் நுழைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலாவின் வீடு சென்னை போயஸ்கார்டன் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், சசிகலாவின் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்ததாக மர்ம நபர் பிடிபட்டுள்ளார். அவர் நள்ளிரவு நேரத்தில் சசிகலாவின் வீட்டிற்கு நுழைந்ததாக கூறி அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரைப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். பின்னர், அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வீட்டின் மொட்டை மாடியில் மர்ம நபர் ஒருவர் நுழைந்த நிலையில், அவரை அங்கிருந்த பாதுகாவலர்கள் பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. இந்த சூழலில் தான், தற்போது வி.கே.சசிகலாவின் வீட்டிற்குள்ளும் மர்ம நபர், நுழைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : 18 சித்தர்களால் அமைக்கப்பட்ட எட்டுக்கை அம்மன் கோயில்..!! பூமிக்கு கீழ் நோக்கிச் செல்லும் படிகள்..!! தமிழ்நாட்டில் இப்படி ஒரு அதிசயமா..?

CHELLA

Next Post

வாகன ஓட்டிகளே..! தேசிய நெடுஞ்சாலைக் கட்டண திருத்தம்... நவம்பர் 15 முதல் அமலுக்கு வருகிறது...!

Sun Oct 5 , 2025
தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) (மூன்றாவது திருத்தம்) விதிகள், 2025, வரும் 2025 நவம்பர் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் இல்லாத பயனர்களிடையே டிஜிட்டல் முறையிலான கட்டணங்களை ஊக்குவிக்கவும், ரொக்கப் பரிவர்த்தனைகளை முற்றிலுமாக அகற்றும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) விதிகள், 2008-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதியின்படி, செல்லுபடியாகும் மற்றும் செயல்படும் […]
we are ending toll nitin gadkari on new toll system 1

You May Like