தேர்தலை புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்..! வெறிச்சோடிய வாக்குப்பதிவு மையம்..!

Poll boycott file photo 1 1

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்..


முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட பலரும் வாக்குப்பதிவு செய்தனர்.. நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன், சூர்யா உள்ளிட்ட பலரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின சமூக மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.. குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தி நீதி கிடைக்கவில்லை எனவும் அந்த மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.. பட்டியலின சமூக மக்கள் தேர்தலை புறக்கணித்ததால் வாக்குச்சாவடி மையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.. வேங்கைவயலில் மொத்தம் உள்ள 67 பட்டியலின் மக்களில் வெறும் 5 பேர் மட்டுமே வாக்களித்ததாக கூறப்படுகிறது.. எனினும் அப்பகுதியில் பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை உடன் துணை ராணுவம் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..

முன்னதாக இந்த நிலையில், நெல்லை நாங்குநேரில் பெரும்பத்து கிராமத்தில் 4 மணி நேரம் ஆகியும் மக்கள் வாக்களிக்க வரவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட்டியலினத்தை சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : தமிழ்நாட்டில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்..! 4 மணி நேரத்தில் 37.56% வாக்குப்பதிவு..! அதிகபட்சம் எங்கு..?

RUPA

Next Post

11 பேர் பலி..! இரண்டு லாரிகள் நடுவில் சிக்கிய கார்.. தீப்பற்றி எரிந்து கோர விபத்து..!

Thu Apr 23 , 2026
Mirzapur road accident: 11 killed after truck brake failure sparks chain collision on highway
mirzapur accident naijpg 1776917434361 2

You May Like