Flash : குட்நியூஸ்.. இன்று மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..! எவ்வளவு தெரியுமா..?

gold jewlery

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.1,17,840க்கு விற்பனை செய்யப்படுகிறது..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.14,730-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.1,17,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி உயர்ந்து ரூ.2.95 லட்சத்திற்கு விற்பனையாகிறது..

Read More : CNG Price Hike : அடுத்த ஷாக்..! CNG விலை மீண்டும் உயர்வு..! 12 நாட்களில் இது 4-வது முறை..!

English Summary

In Chennai today, the price of gold has dropped by Rs. 400 per sovereign and is being sold at Rs. 1,17,840.

RUPA

Next Post

கறிவேப்பிலையின் வியக்க வைக்கும் நன்மைகள்..! தினமும் சாப்பிட்டால் உடலுக்கு என்ன நடக்கும் தெரியுமா..?

Tue May 26 , 2026
The amazing benefits of curry leaves..! Do you know what happens to the body if you eat them every day..?
curry leaves

You May Like