fbpx

ஓரிரு நாளில் திருமணம்!… பல பெண்களுடன் தொடர்பு!… லீக் ஆன சாட்டிங்… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் தொடக்க வீரர்!

ஓரிரு நாட்களில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் மீது மீண்டும் புகார் எழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இமாம்-உல்-ஹக், இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ODI உலகக் கோப்பை 2023 இல் பாகிஸ்தான் அணியின் ஒரு பகுதியாக இருந்தார். இருப்பினும், பாகிஸ்தான் அணி லீக் கட்டத்தில் தோல்வியடைந்தது. இந்தநிலையில், நவம்பர் 25-ம் தேதி இமாம் திருமணம் நடைபெறவுள்ளது. இடது கை பேட்டரான இவர், நவம்பர் 23-ம் தேதி தொடங்கும் திருமண விழாவை தொடர்ந்து லாகூரில் உள்ள நார்வே நாட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவரது நிக்கா விழா சனிக்கிழமையன்று நடத்த முடிவு செய்யப்பட்டது, அதே நேரத்தில் வலிமா வரவேற்பு தேதி ஒரு நாள் கழித்து திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 2019ம் ஆண்டு காலகட்டத்தில் ஒரே நேரத்தில் பல பெண்களுடன் உறவு வைத்திருந்ததாக இமாம் ஆன்லைன் சாட்டிங் வெளியாகி சர்ச்சையானது. இந்தநிலையில், மீண்டும் அதேபோன்று ஒரு சம்பவம் நடந்ததாக பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் இமாமுடனான சாட்டிங்களை வெளியிட்டுள்ளார். அதில், இது இரண்டாவது நிகழ்வாகும். 2019ல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின்போது, நிகழ்ந்த சம்பவம் என்று சமூக வலைதளங்களில் வாட்ஸ் அப் சாட்டிங்களை வெளியிட்டுள்ளார்.

Kokila

Next Post

அப்படிபோடு..!! இனி அமேசானில் காரையும் ஆர்டர் செய்து வாங்கலாம்..!! இதுதான் முதல்முறை..!! எப்படி தெரியுமா..?

Tue Nov 21 , 2023
டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட எலக்டானிக்ஸ் பொருட்கள், துணிகள், உணவுப் பொருட்கள், பொம்மைகள் உள்ளிட்டவற்றை ஆன்லைன் இ-காமர்ஸ் தளங்களில் வாங்கி வருகிறோம். இந்நிலையில், தற்போது புதிதாக நீங்கள் காரையும் வாங்க முடியும் என்றால் நம்புவீர்களா? அட ஆமாங்க, பிரபல இ-காமர்ஸ் தளமான அமேசானில் ஹூண்டாய் மாடல் கார்களை 2024ஆம் ஆண்டில் இருந்து நீங்கள் வீட்டில் இருந்தபடியே புக் செய்து வாங்கிக் கொள்ளலாம். இனி ஜாலியாக சோஃபாவில் அமர்ந்து கோண்டு, ஹாய் அலெக்ஸா..! […]

You May Like