சிவகங்கை மாவட்டத்தில் கணவரிடம் கோபித்துக் கொண்ட மனைவியை வீட்டிற்கு அழைத்து வர எதிர்ப்பு தெரிவித்த மாமியாரை குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் மகாதேவி தம்பதியரின் மூன்றாவது மகளான ஆர்த்தியை மணப்பாறையைச் சேர்ந்த பிரபு என்ற 28 வயது இளைஞனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் அழகாபுரியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று கணவன் மற்றும் மனைவியிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து கணவரிடம் கோபித்துக் கொண்ட ஆர்த்தி தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் சென்று இருக்கிறார். இந்நிலையில் மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்காக பிரபு தனது மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவியை சமாதானம் செய்து அழைத்து செல்ல முயன்று இருக்கிறார்.
இதனைக் கண்ட அவரது மாமியார் மகாதேவி பாத்திரத்தில் கத்தி கூச்சல் போட்டு இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த பிரபு தான் வைத்திருந்த கத்தியால் தனது மாமியார் மகா தேவியை ஓட ஓட விரட்டி கொடூரமாக குத்தி படுகொலை செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் காளையார் கோவில் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொலை நடந்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இறந்த மகா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சரணடைந்த பிரபுவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.