fbpx

வாகன ஓட்டிகளே கவனம்… இன்று முதல் இதுவும் கட்டாயம் இருக்க வேண்டும்…! மீறினால் ரூ.500 அபராதம் வசூல் செய்யப்படும்…!

பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு காவல் துறையினர் சார்பில் அபராதம் விதிக்கப்படும் என்று பெருநகர சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் ஏனைய பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன்படி ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, சென்னை மெட்ரோ இரயிலில்‌ பயணிக்கும்‌ பயணிகள்‌ அனைவரும்‌ இன்று  முதல்‌ முகக்கவசம்‌ அணிந்து பயணிக்க வேண்டுமென்றும்‌, மெட்ரோ இரயில்‌ நிலையங்களுக்கு வந்து செல்லும்‌ பயணிகளும்‌ முகக்கவசம்‌ அணிய வேண்டும்‌ என்று சென்னை மெட்ரோ இரயில்‌ நிர்வாகம்‌ அறிவித்துள்ளது. இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சென்னையில்‌ சமீபத்தில்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று எண்ணிகை அதிகரிப்பு காரணமாக, கொரோனா வைரஸ்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்த வேண்டும்‌. சென்னை மெட்ரோ இரயில்‌ நிலையங்கள்‌ மற்றும்‌ மெட்ரோ இரயில்களில்‌ பயணிக்கும்‌ பயணிகள்‌ அனைவரும்‌ முகக்கவசம்‌ அணிய வேண்டும்‌

கொரோனா வைரஸ்‌ தொற்றை தடுப்பதற்காகவும்‌ அனைத்து பயணிகளின்‌ பாதுகாப்பான பயணத்திற்காகவும்‌ மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ நுழைவதற்கும்‌ மெட்ரோ இரயில்களில்‌ பயணிப்பதற்கும்‌ அனைத்து பயணிகளும்‌ சரியாக முகக்கவசம்‌ அணிந்து பயணம்‌ செய்து சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

Image

Also Read: நல்ல சான்ஸ்… TET தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு பயற்சி வழங்கப்படும்…! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு…!

Vignesh

Next Post

"சூப்பர் நியூஸ்" 30- வயதிற்கு உட்பட்ட வேலை இல்லாத நபரா நீங்க...? தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் என அறிவிப்பு....!

Thu Jul 7 , 2022
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் […]

You May Like