கரூர் துயரம்.. SIT விசாரணையா? சிபிஐ விசாரணையா? உச்சநீதிமன்றம் தீர்ப்பு எப்போது?

tvk vijay supreme court

41 உயிர்களை பலி கொண்ட கரூர் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் தவெக உள்ளிட்ட தரப்புகள் சார்பில் 5 மனுக்கள் தொடரப்பட்டுள்ளது.


இந்த 5 மனுக்களும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி, என்.வி அஞ்சாரியா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.. அப்போது தவெக தரப்பு மாநில அரசின் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் விஜய்யின் தலைமைப்பண்பு குறித்து விமர்சித்து குறித்தும் தவெக தரப்பு வாதிட்டது.. அப்போது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர்..

அதே போல் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினர் தொடர்ந்த சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.. ஆனால் அனைத்து வழக்குகளையும் சிபிஐ மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் அரிய வழக்குகளை மட்டுமே மாற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பு வாதிட்டது.

கரூர் சம்பவம் தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தயாராக உள்ளதாகவும் என்று தமிழக அரசு அனுமதி கோரியது.. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்கினர்.. அனைத்து மனுக்கள் மற்றும் பிரமாண பத்திரத்தை பார்த்த பிறகு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்..

இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக தவெக, பாஜக வழக்கறிஞர், பலியானவர்களின் உறவுகள் தாக்கல் செய்த 5 மனுக்கள் மீது திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா? அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமா? அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் புதிய சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படுமா என்பது திங்கள்கிழமை தான் தெரியவரும்..

RUPA

Next Post

இந்திய ஐடி துறையில் அதிகரித்து வரும் சைலண்ட் பணிநீக்கம்.. 50,000 பேர் வேலை இழக்கும் அபாயம்!

Sat Oct 11 , 2025
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் தற்போது “silent layoffs” எனப்படும் அமைதியான பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. 2025-ம் ஆண்டு முடிவடைவதற்கு முன்பு 50,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஐடி துறை நிபுணர்கள் இதுகுறித்து பேசிய போது “ இந்த நிலைமை AI-ஐ சார்ந்த தானியங்கி (automation), செலவு குறைத்தல் (cost-cutting), மற்றும் திறன்மிக்க அமைப்புப் போக்குகள் (competency-based organizational structures) ஆகியவற்றால் […]
layoff it

You May Like